Search

உலகம் சமூக ஊடகங்களை எப்படி மாற்றியிருக்கிறது

A Tamil translation of How the World Changed Social Media 

Daniel Miller, Dr Elisabetta Costa, Nell Haynes, Tom McDonald, Dr Razvan Nicolescu, Jolynna Sinanan, Juliano Spyer, Shriram Venkatraman, and Xinyuan Wang

ISBN: 9781787354920  

Publication: February 28, 2019

Series: Why We Post

ஒன்பது மானுடவியலாளர்கள் பிரேசில், சீனா, இந்தியா, துருக்கி, இங்கிலாந்து, சிலி, டிரினிடாட், இத்தாலி போன்ற ஒன்பது வெவ்வேறு சமூகங்களில் 15 மாதங்களை தங்கியிருந்து நடத்திய ஆய்வின் கண்டுபிடிப்புகளை ஆராயும் "நாம் ஏன் பதிவிடுகிறோம்" என்ற புத்தக வரிசையின் முதல் புத்தகம் தான் உலகம் சமூக ஊடகங்களை எப்படி மாற்றியிருக்கிறது என்ற இந்தப் புத்தகம். இது மேற்கூறிய ஆராய்ச்சியின் முடிவுகளை தொகுத்து வழங்கியும், அரசியல், கல்வி, பாலினம், வணிகம் ஆகியவற்றின் மீது சமூக ஊடகங்களின் தாக்கத்தைப் பற்றி ஆராய்ந்தும், ஒரு ஒப்பீட்டு ஆய்வினை வழங்குகிறது. காட்சிக்குரிய தகவல் பரிமாற்றத்தின் மீதான அதிக முக்கியத்துவத்தின் விளைவுகள் என்ன? நாம் அதிக தனிமையானவர்களாக ஆகிவருகிறோமா அல்லது அதிக சமூகமயமானவர்களாக ஆகிவருகிறோமா? பொதுநோக்கிய சமூக ஊடகங்கள் ஏன் மிகவும் பழமைவாதம் நிறைந்ததாக இருக்கிறது? நிகழ்நிலையில் உள்ள சமத்துவத்தால், இயல்புநிலையில் உள்ள சமத்துவமின்மையை ஏன் மாற்ற முடியவில்லை? மீம்கள் எப்படி இணையத்தின் மரபுக் காவலர்களாக மாறின? போன்றவை தான் அவை.

செயல்திட்டத்தை கல்விக் கட்டமைப்பு மற்றும் கண்டுபிடிப்புகளுக்கு பொறுப்பேற்க உதவும் கருத்தியல் கூறுகள் ஆகியவற்றிற்கான அறிமுகவுரையின் துணையுடன், இந்தப் புத்தகம், சமூக ஊடகங்கள் போன்ற எங்குமுளத்தன்மையுள்ள, மிகவும் நெருக்கமான ஒன்றை புரிந்து கொண்டு பாராட்ட ஒரே வழி, அதில் பதிவிடும் மக்களின் வாழ்வில் மூழ்கிப் பார்ப்பது தான் என்று வாதிடுகிறது. அப்போது தான் நம்மால், உலகெங்கிலும் உள்ள மக்கள் சமூக ஊடகங்களை எவ்வாறு எதிர்பாராத வழிகளில் மாற்றியிருக்கின்றனர் என்று கண்டறிந்து அதன் விளைவுகளை எடைபோட முடியும்.

 

 

 

Format: Open Access PDF
ISBN: 9781787354920 
Publication: February 28, 2019
Series: Why We Post
டேனியல் மில்லர் UCL-ல் மானுடவியல் பேராசிரியராக இருக்கிறார். எலிசபெட்டா கோஸ்டா, அங்காராவின் பிரிட்டிஷ் கல்வி நிறுவனத்தில் (British Institute at Ankara (BIAA)) முதுகலை முனைவு ஆராய்ச்சி உதவியாளராக (Postdoctoral Research Fellow) இருக்கிறார். நெல் ஹெய்ன்ஸ் சாண்டியாகோவில் உள்ள Pontificia Universidad Católica de Chile-யில் முதுகலை முனைவு கூட்டாளியாக (Postdoctoral Fellow) இருக்கிறார். டாம் மெக்டொனால்ட், ஹாங்காங் பல்கலைக்கழகத்தின், சமூகவியல் துறையில், உதவிப்பேராசிரியராக இருக்கிறார். ரஸ்வான் நிகோலஸ்கு, UCL-ல், ஆராய்ச்சி உதவியாளராக இருக்கிறார். அவர் 2013-ல் தனது முனைவர் பட்டத்தை இங்கிருந்து தான் பெற்றார். ஜோலின்னா சினனன், ராயல் மெல்போர்ன் தொழில்நுட்ப கல்விநிறுவனத்தில் (Royal Melbourne Institute of Technology (RMIT)) துணைவேந்தரின் முதுகலை முனைவு ஆராய்ச்சி உதவியாளராக (Postdoctoral Research Fellow) இருக்கிறார். ஜூலியானோ ஸ்பையர், ஸ்ரீராம் வெங்கட்ராமன் மற்றும் க்சின்யுவான் வாங் ஆகியோர், UCL-ல் மானுடவியல் துறையில் முனைவு மாணவர்களாக இருக்கின்றனர்.
1. சமூக ஊடகங்கள் என்றால் என்ன?

2. சமூக ஊடகங்களைப் பற்றிய கல்வி ஆய்வுகள்

3. எங்களுடைய வழிமுறைகளும் அணுகுமுறைகளும்

4. எங்களது கணக்கெடுப்பின் முடிவுகள்
பத்து முக்கிய தலைப்புகள்

5. கல்வியும் இளம் வயதினரும்

6. வேலையும் வணிகமும்

7. நிகழ்நிலை மற்றும் இயல்புநிலை உறவுமுறைகள்

8. பாலினம்

9. சமத்துவமின்மை

10.அரசியல்

11. காட்சிக்குரிய படங்கள்

12.தனிமனிதவாதம்

13.சமூக ஊடகங்கள் மக்களை
சந்தோஷப்படுத்துகின்றனவா?

14.எதிர்காலம்

Scroll to top