Search

தென்னிந்தியாவில் சமூக ஊடகங்கள்

A Tamil Translation of Social Media in South India

Shriram Venkatraman

ISBN: 9781787354906  

Publication: February 28, 2019

Series: Why We Post

தென்னிந்தியாவில் சமூக ஊடகங்கள், தமிழ்நாட்டு மக்களின் அன்றாட வாழ்வில் சமூக ஊடகங்களின் பயன்பாடு பற்றிய புரிதலை தீவிர மாற்றமடைந்து வரும் ஒரு பிராந்தியத்தில் நடத்தப்பட்ட முதல் மக்கள் இன அமைப்பியல் ஆய்வின் மூலம் நமக்களித்திருக்கிறது. கடந்த பத்தாண்டுகளில் ஐடி நிறுவனங்களின் வருகை, முன்பு விவசாய பகுதியாக இருந்த ஒரு இடத்தை வளர்ந்து கொண்டேயிருக்கும் அறிவார்ந்த பொருளாதாரம் மற்றும் பாரம்பரிய கிராம வாழ்வு ஆகியவற்றின் பக்க அணிமை நிலையாக ஆக்கியிருக்கிறது. இந்த பக்க அணிமை நிலையால் ஒருசில வர்க்க பேதங்கள் காணப்பட்டபோதும், இந்த பிராந்தியத்தில் நடத்தப்பட்ட சமூக ஊடக ஆய்வு, ஒற்றுமைகளும் இருந்திருப்பதற்கான சான்றளிக்கிறது. குறிப்பாக பழைய மற்றும் புதிய குடியிருப்பாளர்களிடையே பணி மற்றும் வாழ்வின் இடையேயான தேய்ந்து வரும் எல்லைகளில் இது காணப்படுகிறது.

 

வெங்கட்ராமன், வீடுகள், பணியிடங்கள் மற்றும் பள்ளிகளில் சமூக ஊடகங்களின் பாதிப்புகளை ஆராய்ந்து, இனம், வர்க்கம், வயது பாலினம் ஆகியவற்றின் தாக்கத்தையும் அலசி, எந்த வகையான சமூக ஊடகத்தளங்கள் எந்தெந்த சூழல்களில் பயன்படுத்தப்படுகின்றன என்பதை ஆராய்ந்திருக்கிறார். இந்த காரணிகள், சமூக ஊடக பயன்பாட்டின் மீது குறிப்பிடத்தக்க பாதிப்பை ஏற்படுத்தியிருப்பதாக கூறும் அவர், தென்னிந்தியாவில் சமூக ஊடகங்கள், சமுதாய மாற்றத்தை தூண்டியிருப்பது போல தோன்றினாலும், அவை உண்மையில், உள்ளூர் பாரம்பரியங்கள் மற்றும் நடைமுறைகளால் கட்டுண்டு இருக்கின்றன என்றும் குறிப்பிடுகிறார்.

 

Format: Open Access PDF
ISBN: 9781787354906
Publication: February 28, 2019
Series: Why We Post
श्रीराम वेंकटरामन ने यूसीएल से मानवविज्ञान पर पीएच.डी. प्राप्त किये हैं और अब नई दिल्ली के इन्द्रप्रस्था इंस्टिट्यूट ऑफ़ इनफार्मेशन टेक्नोलॉजी (आइआइआइटीडी) में सहायक प्रोफेसर हैं. वे सांख्यिकी में प्रशिक्षित पेशेवर हैं और उनके डाक्टरल अध्ययन के पहले, यूएसए के वालमार्ट में नेतृत्व के पद निभाते थे. उनके अनुसंधान के शौक में कार्य-क्षेत्र प्रौद्योगिकी, व्यवस्थापन संस्कृति और उद्यमवृत्ति शामिल है.
1. பஞ்சக்கிராமியும் அதன் சிக்கற்பாடுகளும்

2. சமூக ஊடக நிலப்பரப்பு: மக்கள், அவர்களின் புலனுணர்வு மற்றும் சமூக ஊடக இருப்பு

3. காட்சிக்குரிய பதிவுகள்: தொடரும் காட்சிக்குரிய இடப்பரப்பு

4. உறவுமுறைகள்: சமூக ஊடகங்களில் உறவுமுறைகள்

5. பணியிடத்திற்கு வீட்டை எடுத்துச்செல்வது - பணிசார்ந்த மற்றும் பணிசாரா எல்லைகளை மந்தமாக்குவதில் சமூக ஊடகங்களின் பங்கு

6. பரந்த உலகம்: அறிவார்ந்த பொருளாதாரத்தில் சமூக ஊடகங்கள் மற்றும் கல்வி.

7. முடிவுரை: சமூக ஊடகங்களும் அவற்றின் தொடரும் சிக்கற்பாடுகளும்

Scroll to top